Followers

Monday, November 8, 2010

தமிழச்சி என்பதால் என்ன?



எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள். பண்டிகைகள் என்பது நாம் கவலைகளை மறந்து சந்தோஷமாக விடுமுறையுடன் கொண்டாடுவதட்க்காக உருவாக்க பட்டவைகளாகவே நான் பார்க்கிறேன்.இதில் எனது கண்ணோட்டதிட்கும் வீட்டவர் கண்ணோட்டதிட்கும் நிறைய வேறுபாடுகள். எனினும்  நல்ல விதமாக பண்டிகை முடிந்தது. பட்டாசு இல்லாமல், வான வேடிக்கைகள் இல்லாமல் எங்களுடைய 3 வது தீபாவளி வியட்நாமில்.

உங்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

விஷயத்துக்கு வருகிறேன் .......
எனக்கு இந்த செய்தித்தாள் படிக்கும் பழக்கம் என்பது என் திருமணத்திட்கு பிறகே பரிச்சயமானது. அதற்கு முன் தொலைக்காட்சி வழி மட்டுமே என் செய்தி அறிவு.
நாங்கள் இந்த நாட்டுக்கு வந்து 3 வருடம் முடிகிறது. இங்கு அதிகப்படியான இந்தியர்கள் கிடையாது மற்றும் தமிழர்கள் குடும்பம் இரண்டு உள்ளது. அவர்களும் பொதுவாக அதிகமாக புழங்குவது இல்லை. ஏன்னெனில் குழந்தைகளே அதிக நேரத்தை எடுத்துகொள்கின்றன. நான் சந்திக்கும் பெரும்பான்மையோர் வடநாட்டவர்களே (வட இந்தியர்கள்).

இவ்வாறு எனது வாழ்க்கை சில நேரங்களில் தனிமையாகவும், சில நேரங்களில் இந்த நண்பிகளுடனும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

அவ்வாறு தான் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த ஒரு பஞ்சாபி நண்பி கேட்ட விஷயம் எனக்கு தூக்கி வாரி போட்டது. அது என்ன என்றால் அவளுடைய கணவர் அவளுக்கு வழங்கிய அறிவுரையின் ஒரு பகுதியே. நல்ல வேலை என் வீட்டவர் காதில் கேட்டிருக்க வேண்டுமே, அவ்வளவு தான் பெரிய சண்டையே வந்திருக்கும். அந்த நிகழ்வு பற்றியே இந்த பதிவு.

அவள் கூறியது: என் கணவர் அடிக்கடி என்னிடம் சொல்வது என்ன தெரியுமா ?

நான் : என்ன சொல்லுங்கள்.

அவள் கூறியது: நீங்கள் என்னை தவறாக எடுத்து கொள்ளக்கூடாது.

நான் : இல்லை சொல்லுங்கள்.

அவள்: நீங்கள் தமிழ் நாட்டவரா  அல்லது இலங்கையை சேர்ந்தவரா?

நான்தமிழ் நாட்டவள், ஏன் அதில் என்ன பிரச்சினை!

அவள்உங்களிடம் பழகும் போது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் என்றும். எப்போதும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவே உங்களின் எண்ணங்கள் இருக்கும் என்றும் என் கணவர் கூறினார்.

நான்ஏன் அப்படி கூறினார்?

அவள்: உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த தமிழர்கள் தான் இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்
வேலைக்கு சென்று சேர்ந்து, இன்று அந்த நாட்டிலே பெரிய பிரச்சினையை உருவாக்கி கொண்டு இருக்கிறார்களாம். அதே எண்ணம்தான் உங்களுக்கும் இருக்கும். எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்பதே உங்கள் சமூகத்தின் குறிக்கோள். எனவே உங்களிடம் பழக்கம் வைத்து கொள்ள வேண்டாம் என்று கூறினார்.

அவள் கூறியதில் இருந்து எனக்கு புலப்பட்டது யாதெனின்: எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் இவர்கள். அதுவும் ஒரே நாட்டில் இருந்து கொண்டு நம்மை ஏன் இவர்கள் சண்டைகாரர்களாக நினைக்கிறார்கள்.

அடப்பாவிகளா எங்கள் சமூகமே அந்நாட்டை உருவாக்கி ஆண்டது. நேற்று வந்த பாதகர்களால் எம் தொப்புள் கொடி சொந்தங்கள் இன்றும் முள்வேலியில் அடைபட்டு கிடக்கின்றன. என்னை போன்ற பல பேர் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். இந்த நிலையில் எங்களுக்கு தோள் கொடுக்கவேண்டியவர்களே எங்களை கேவலமாக பேசும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோமே என்ற உணர்வு எனக்கு மேலோங்கி நிற்கிறது.

எந்த அளவுக்கு வடகத்திய ஊடகங்கள் நம்மை பற்றி தவறான புரிதலை வட நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றன. என்னவோ நாம் தினமும் சண்டைக்கு அலையும் மக்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வைத்திருகின்றன.

ஒரு தவறான புரிதல் கொண்டிருக்கும் ஆண் அதைபற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமல் அதை அப்படியா தனது துணைக்கும் ஏற்றி விடுவது

என்னால் திட்ட முடியவில்லை அவளை!!!!!!!!


அவளிடம் நான் தமிழனின் உண்மையான பாரம்பரியம், இன்றைய பிரச்சனையின் உண்மைகள் பலவற்றையும் எடுத்துக்கூறி புரியவைக்க நெடு நேரமானது. அப்போது தான் எனக்கு ஒரு விஷயம் தெளிவானது. இந்த தவறான புரிதலின் காரணமாக தான் மற்ற வட இந்திய நண்பிகளும் என்னிடம் சற்று விலகி இருக்கிறார்கள் என்பது.

மற்றொரு நாள் அவர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்து தமிழரை பற்றிய தவறான புரிதலை விளக்கப்படுத்தி, உண்மை நிலையென்ன என்பதை தெளிவு படுத்திய பின்னே தான் எனக்கு தூக்கம் வந்தது.

5 comments:

சுதர்ஷன் said...

அருமை .. இன்றும் அடிபணியாத தலை குனியாத தமிழன் இலங்கை தமிழன் .. ஆண்டவன் ஆளப்படுகிறான் அடக்கி ஒடுக்கப்படுகிறான் ..ஆனால் ஒடுங்கவில்லை .. இது தான் வரலாற்று சுருக்கம் . இது விளங்காமல் பலர் உண்டு ... வாழ்த்துக்கள் .. நன்றாக இருக்கிறது ..

தினேஷ்குமார் said...
This comment has been removed by the author.
தினேஷ்குமார் said...

ஆம் சண்டைக்காரர்கள் தான் நாங்கள்
உரிமைக்காக போராடும்
உன்னத தமிழர்கள் நாங்கள்
உயர்வுக்காக
தன்னைவிற்கும்
தரங்கெட்டவர்கள்
அல்ல நாங்கள்
தமிழுக்காக
தலை கொடுக்கவும்
அஞ்சமாட்டோம்
தலை கொய்யவும்
அஞ்சமாட்டோம்
அஞ்சாநெஞ்சம்
கொண்ட தமிழர்கள்
நாங்கள்..........
November 8, 2010 3:2

விஷாலி said...

என்தளத்திற்கு வருகை தந்த திரு. S.Sudharshan அவர்களுக்கு நன்றி

விஷாலி said...

தளத்திற்கு வருகை தந்த திரு. dineshkumar அவர்களுக்கு நன்றி