Followers

Tuesday, June 7, 2011

பயம் என்பது எப்படி என்னை விட்டு போனது!


வணக்கம் உறவுகளே.. 

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஆனா என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிரமமான விஷயம் அதுவும் குழந்தையுடன் செல்லும் பெண்களுக்கு பெரிய போராட்டம் என்பேன்.

பெண்களுக்கு பொறுமை என்பது மிகத்தேவையான ஒன்று அதுவும் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் மிகுந்த பொறுமையுடன் கூடிய விழிப்போடு இருக்க வேண்டியது மிக அவசியம் என்று நினைக்கிறேன். என்னுடைய பயணம் பற்றிய பகிர்வே இந்த பதிவு.


நான் மிகவும் அதிகமாக படித்தவள் இல்லை! அதனால் எனக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியுமே தவிர சரளமாக பேச இயலாது. எனினும் என் துணைவரின் வற்புறுத்தலால் ஓரளவுக்கு இப்போது பேசுகிறேன். நாடு விட்டு நாடு பயணிக்கும் விமானத்தை திருமணத்துக்கு முன் பார்த்திருக்கிறேன் அவ்வளவே! பயணித்தது இல்லை.


இந்த விஷயத்தில் நான் மிகுந்த பயம் கொண்டவளாக இருந்திருக்கிறேன். அதாவது எந்த இடத்திற்க்கு சென்றாலும் யாராவது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் சென்று தான் பழக்கம். பெரிய குடும்பம் என்பதால் அப்படியே வளர்ந்து விட்டேன். திருமணம் முடித்த பிறகும் சில வருடம் அப்படியே இருந்தேன். அந்த நேரத்தில் துணைவருக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்து கிளம்பினார். 


வேலை பொருட்டு அவர் முதலில் சென்று விட்டார். பின்பு கிட்ட தட்ட மூன்று மாதம் கழித்து நான் செல்ல முடிவாகியது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது...எங்கள் வீட்டிலோ என் கணவரை வற்புறுத்த சொன்னார்கள். அதாவது நான் தனியாக செல்லவேண்டாம் என்று சொல்லி அவரை வந்து கூட்டிப்போக சொன்னார்கள். அதுவும் குழந்தையுடன் செல்வது இன்னும் கடினம் என்று பய முறுத்தினார்கள். 


ஆனால் நான் தனியாகவே செல்வதாக முடிவு செய்து விட்டேன். தேவையில்லாமல் அவருக்கு தொந்தரவு மற்றும் வீண் பண செலவு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அவரும் தைரியமாக வந்து சேர் என்று சொல்லி விட்டார்!. அதுவும் எங்கள் மகன் அப்போது 2 வயது குழந்தை. 

எல்லோருக்கும் தைரியம் சொல்லி விட்டு நான் புறப்பட்டேன்......

தொடரும்...

கொஞ்சம் மேலாக: நான் சிறிய சிறிய பதிவுகளாகவே இடுவதை பொறுத்துக்கொள்ளுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி!


1 comments: