வேலைப்பளு அதிகரித்த காரணத்தால் இடுகை எழுத முடியவில்லை. சமீபத்தில் மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்ப்பட்டதால், உங்களை காண மீண்டும் வந்திருக்கிறேன்.
நெடு நாட்கள் கழித்து வந்ததாலோ என்னவோ கடவுளைப்பற்றிய பதிவு போட மனம் விரும்பியது.
பஞ்ச முகம் கொண்ட ஆஞ்சநேயர் பற்றிய இந்த இடுகை உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்..
அப்போது சென்னையில் இருந்து கார் மூலம் பாண்டிக்கு சென்று கொண்டு இருந்தோம். போகும் வழியில் திண்டிவனத்தை தாண்டி 29 வது கீமீட்டரில் ஓர் கோயில் அமைந்திருப்பதை கண்டு என் துணைவரை வண்டியை நிறுத்தும்படி கூறி நிறுத்தினேன்.
அந்த இடத்தின் பெயர் பஞ்சசாவடி என்பதும், அங்கு குடி கொண்டு இருப்பவர் எல்லாம் வல்ல ஆஞ்சநேயர் என்பதும் அறிந்து எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டேன். கோவிலைப்பற்றி எனக்கு தெரியவந்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...
திண்டிவனத்தில் இருந்து 29 கீமீ தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 10 கீமீ தூரத்திலும் அமைந்துள்ள அழகிய கோயில் இது. ஆஞ்சநேயரின் சிறப்பு என்னவெனில் 36 அடி உயரமும், 15 அடி பரந்த அகலமும் கொண்டு விளங்குகிறார். 150 டன் எடை கொண்ட ஒரே கிரனைட் கல்லால் உருப்பெற்று இருக்கிறார்.
பஞ்ச முகம் என்பதன் முழு அமைப்பு - ஆஞ்சநேயர், நரசிம்மர், குதிரை முகம், கருட முகம், பன்றி முகம் என கொண்டுள்ளார்.
அங்கு ஆஞ்சநேயர் மட்டும் அல்லாமல் மகா கணபதி மற்றும் பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி கோயில்களும் உண்டு.
வருகைக்கு நன்றி,
வித்யா குமார்
14 comments:
//சென்னையில் இருந்து 29 கீமீ தூரத்திலும், பாண்டிச்சேரியில் இருந்து 10 கீமீ தூரத்திலும் அமைந்துள்ள அழகிய கோயில் இது. //
சென்னை என்பதற்கு பதில் திண்டிவனம் என்று பிழை திருத்தம் செய்யவும்
நல்ல கோவில் இது, நானும் தரிசித்திருக்கிறேன்.
பகிர்விற்கு நன்றி.
அட இது நம்ம ஊரு விஷயம்.பகிர்வுக்கு நன்றி!
போக வேண்டும் என நீண்ட நாள் ஆசை!
என்னய்யா பிளாக் மொத்தமும் கலர் மாறி இருக்கு...???
அழகா இருக்கு...!!!
எல்லா ஓட்டும் போட்டாச்சு.
நல்ல விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன் அடுத்த முறை சென்னை வரும் போது கட்டாயம் தரிசிக்கிறேன் நன்றி
நல்ல தகவல்
இன்று என் வலையில்
சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்
நல்ல கோவில் தான் ஒரு நாள் போய் பார்க்க வேண்டும்
நல்ல தகவல்
பகிர்வுக்கு நன்றிகள்.,
நல்ல பகிர்வு
மிகப்பெரிய ஆஞ்சநேயர் 5 முகங்களுடன் கூடியவர். பிரசாதம் தருவாங்க பாருங்க....ஒரு நேரம் வயிறே நிரம்பிடும்.
Post a Comment