கடவுளுக்கு நன்றி
பேர் தெரியாத ஊர்ல மாட்டிகொண்டு விழி பிதுங்குவதை கேள்விப்பட்டு இருக்கிறேன் . ஆனால் முதன் முதல் அனுபவபூர்வமாக உணர்ந்தது இப்போதுதான். என்ன செய்ய வீட்டுலே இருக்க சொல்லி சொன்னதை கேட்காம போனது எவ்ளோவு பெரிய விஷயமாயிடுசி.
ஹனோயில் இருந்து கிட்ட தட்ட 400 கி. மி. தூரம் உள்ளது சொன்லா எனும் இடம். வீடவர்க்கு அங்கு ஒரு முக்கிய வேலை இருந்ததால் அவர் செல்ல வேண்டி இருந்தது. நானும் என் குட்டியும் அவரிடம் அடம் பிடித்து கூடவே என்றோம். போகும் வழியெலாம் அழகிய இயற்கை வளங்கள் நிறைந்தாக இருந்தது. கார் செல்லும் பாதையெல்லாம் மக்கள் சிறிய சிறிய சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர். நாங்கள் செல்ல வேண்டிய இடம் மலைசார்ந்த இடம் என்பதால் ஓட்டுனர் 60 கி.மி வேகத்திலேயே சென்றார்.
அவ்விடத்தை சேரும் பொது இருட்டிவிட்டது. நிர்வாகத்தின் ஓட்டலில் தங்கினோம்.
அடுத்த காலையில் வீட்டவருக்கு டாமின் மத்திய இடத்திட்டு செல்ல வேண்டி இருந்ததால் அவர் உடனே தூங்கிவிட்டார். நானும் குட்டிசும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு தூங்க போனோம்.
இரவு சரியான மழை ஓஒ வென்று பைய்தது.
காலையில் 6 மணிக்கெல்லாம் வீட்டவர் சென்றுவிட்டார். இந்த இடம் வியட்நாமில் அழகிய இடமாகும். சுற்றி முழுவதும் மலைகள். நடுவில் இந்த ஊர் அமைந்துள்ளது.
காலை 8 மணி : குட்டிசுக்கு பாலும் எனக்கு நூடுல்சும் முடிந்தது. இந்த இடத்தில கைபேசி விட்டு விட்டு தான் கேட்கும் என்று முன்னமே வீட்டவர் சொல்லிசென்றார். மதியம் வந்து எங்களை சுற்றி பார்க்க கூட்டி செல்வதாக சொல்லிசென்றார். மணி 3 ஆயிற்று அவரை காணவில்லை, அவருடைய கைபேசிக்கும் பேச இயலவில்லை.
சரி ஹோட்டலின் வரவேற்பு இடத்திற்கு சென்று கேட்டு வரலாம் என்று சென்றேன். அப்போது அவர்கள் சொன்னது தூகிவரிபோட்டது. சுற்றிலும் அதிகபடியான வெள்ளம் காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஊரகிபோனது சொன்லா.
அங்கிருந்த யாருக்கும் ஆங்கிலம் தெரியாது மற்றும் எனக்கு தகவல் சொன்ன அந்த பெண்ணும் சென்று விட்டாள். மட்டரவர்கள் எல்லாமே அவர்கள் தாய் மொழியில் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தனர் (வியத்னாமீஸ் மொழி). அறையில் சென்று தொலைகாட்சியில் பார்த்தால் மிகபெரிய வெள்ளத்தில் வியட்நாமின் பல பகுதிகள் மிதப்பதை கண்பிதர்கள்.
என்ன செய்வது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட இரவு 10 மணி வரை இதே நிலை. ஆனால் குட்டிஸ் மட்டும் அவன் விளையாட்டில் மூழ்கி இருந்தான். எனக்கு அழுகை வந்து கொண்டு இருந்தது.
பல பேர் அவர்களின் சொந்தங்களை இழந்து கதறிக்கொண்டு இருப்பதை தொலைகாட்சியில் காட்டிக்கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லை எனினும் அவர்களின் துயரம் என் தொண்டையை அடைத்தது. ஐயோ நம்ம வீட்டவர் என்ன ஆனாரோ என்பதை நினைத்து நான் அழுது கொண்டு இருந்தேன். என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போது அந்த வரவேற்பறை பெண் வந்தாள். அவள் என்னிடம் கவலை படாதிர்கள் உங்கள் கணவர் நன்றாக இருப்பார் பயபடதிர்கள் என்று எனக்கு ஆறுதல் கூறினாள். எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் புலம்பிக்கொண்டு இருந்தேன். என் குட்டிசும் என் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான் வெகு நேரமாக.
இப்போது மழை விட்டு இருந்தது. அவர் வந்து சேர்ந்தார் எனக்கு உயிர் வந்தது போலிருந்து. அவர் சென்ற ஜீப் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும் அதனால் ஒரு காட்டு பகுதியில் தங்க வேண்டி வந்ததாகவும் என்னவர் விளக்கினார். எப்படியோ உயிர் திரும்ப வர 12 மணி நேரம் ஆயிற்று.
சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தைரியமான பெண்ணாக நான் வளரவில்லை என்பதை உணர்ந்தேன். நாங்கள் திரும்ப ஹானாய்க்கு வர அடுத்த இரண்டு நாட்களாயிற்று.
தொடர்வேன்,
வித்யா வி
2 comments:
உங்களவர் வந்துவிட்டார் அல்லவா..... கடவுளுக்கு நன்றி நானும் சொல்லிக்கொள்கிறேன் தோழி
நன்றி நண்பரே
வந்துவிட்டார் மற்றும் அந்த மறக்க முடியாத 12 மணி நேர பதைப்பே இந்த பதிவு.
Post a Comment