மஞ்சுவோட அப்பா கேட்டார் - ?
எல்லா விஷயத்தையும் சொல்லிடீங்களா இல்ல எதாவது விட்டுடீங்களா.
ஜோசியர் - எல்லாம் சொல்லிட்டேன்....
ஆனா அவங்க கிட்ட ரெண்டு விஷயம் சொல்லல. என்னது அது - ஒன்னு உன் பொண்ணு படிப்பு விஷயம். ரெண்டாவது உன் முதல் பொண்ணோட காதல் கல்யாண விஷயம்.
வேணாம் ஜோசியரே எல்லாத்தையும் சொல்லிடுங்க ...........
நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க மாப்பிளை நல்லா சம்பாதிக்கிறார். அவரு கேட்டது பொண்ணு பத்தாவது வரை மட்டும் படிச்சிருந்தா போதும்னு. இப்ப இருக்குற எட்டாவதுக்கும், பத்தாவதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லங்க.
அப்புறம் உங்க முத பொண்ணோட கல்யாண விஷயம் ஒன்னும் பெரிசா சொல்லிகரதுக்கில்ல.
அப்படி இல்லைங்க நாளைக்கு இதனால மனவருத்தம் வந்துரக்கூடாது.
ஒன்னும் வராது நான் பாத்துக்கறேன்.
முதல் படி முடிந்து பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது.
எல்லாருக்கும் திருப்தியாக இருந்ததால் அடுத்த விஷயமான வரதட்சணை பேச்சு வந்தது. மாப்பிள்ளை அம்மா” எங்க வீட்டுல ரெண்டுமே பசங்கதான். ஒரு பெண்ணு தான் உங்கவீட்டுல இருந்து கூட்டி போறோம். அதனால எங்களுக்கு பண விஷயம் ஏதும் வேணாம் உங்களுக்கு எவ்வளவு சீக்கிரமா மண்டபம் பாக்க முடியுமோ பாருங்க.” என்று சொல்லிவிட்டார்கள் .
மூன்று மாதம் கழித்து நாள் குறித்தார்கள் நிச்சயதிட்காக. நிச்சயம் நல்ல விதமாக முடிந்து அடுத்ததாக திருமணம் அடுத்த 3 மாதம் கழித்து குறித்தனர். இதனிடையே மட்டற்ற மகிழ்ச்சியுடன் மஞ்சு எங்களை காண வந்தாள்.
நான் அவளிடம் என்னடி மாப்பிள்ளை எப்படி என்று கேட்டேன். அவளும் அவர் மாநிரம்டி ஆனா நல்லா கல கலன்னு பேசுறார்.
அப்டியா ஓ பேசற அளவுக்கு வந்தாச்சா.
அவள் சொன்னாள் நான் தான் ஒரு முறை அவருக்கு போன் பண்ணேன். அவரு என்ன உனக்கு பிடிச்சிருக்கா இல்ல உங்க வீட்டுல சொன்னதுக்காக சரின்னு சொல்லிட்டியா என்றார். நானும் இல்லங்க எனக்கும் உங்கள பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ரொம்ப சந்தோசம் அப்டின்னு சொன்னாரு.
நல்லபடியாக திருமணம் இனிதே முடிந்தது.
அவளும் சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றுவிட்டாள். அடிக்கடி போன் செய்வாள் என் வீட்டில் நான் ராணி போல இருக்கிறேன் என்னை எந்த வேலையும் என் மாமியார் செய்ய விடுவதில்லை என்றும் வேலைக்கு ஆள் வைத்துள்ளார்கள் என்றும் கூறினாள்.
பின்பு ஒரு நாள் அவளிடம் இருந்து போன் வந்தது.
தான் கருவுற்று இருப்பதாகவும், சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினாள். அவளை கிட்ட தட்ட ஒரு வருடம் கழித்து சென்னையில் ஒரு மருத்துவமனையில் குழந்தையுடன் பார்க்க முடிந்தது. அப்போது தான் அவளுக்கு குழந்தை பிறந்திருந்தது அதுவும் இரட்டை குழந்தைகள் ஆண் மற்றும் ஒரு பெண். என்னை பார்த்த பொழுது அவள் சொன்னது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் எவ்வளவோ கடவுளை வேண்டி இருக்கிறேன், என்னுடைய பிரார்த்தனை கடவுளுக்கு எட்டிவிட்டது என்று நினைக்கிறேன். நான் எனது வாழ்நாளில் கடந்த ஒரு வருட காலமாகத்தான் சந்தோஷத்துடன் வாழ்கிறேன் என்று அவள் கூறியதும் அவள் கண்களில் ஆனந்த கண்ணீரை கண்டேன்.
நான் பார்த்த அந்த நண்பி இன்று ஓர் முதுகளை பட்டதாரி. அவளுடைய கணவன் அவளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி இன்று தனியாக ஒரு அழகு நிலையத்தையே நடத்தும் அளவுக்கு அவளின் எண்ணத்தை (தாழ்வு மனப்பான்மை) மாற்றி விட்டார்.
அவள் அடிக்கடி கூறிவந்த அதிர்ஷ்டம் கெட்டவள் எனும் வார்த்தை மாறிவிட்டது. இன்று எங்கள் நண்பிகளில் அவள் மிக உயர்ந்த நிலையை பணம் மட்டும் இல்லாது குணத்திலும் அடைந்திருக்கிறாள். இன்றும் அவளிடம் நாங்கள் எந்த வேறுபாட்டையும் காண இயலவில்லை. அவளிடம் 15 பெண்கள் வேலை செய்கின்றனர்.
என்றும் பொறுமையுடன் பேசும் அவளின் குணம் இன்றைக்கும் அவளிடம் இருப்பதை நான் மிகபெரிய விஷயமாகவே பார்க்கிறேன்.
இப்பொழுதெல்லாம் அவள் அடிக்கடி சொல்லும் வார்த்தை என் வெற்றிக்கு என் கணவரின் நம்பிக்கையே காரணம். என்னை அவர் புரிந்து கொண்டது மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காட்டும் அன்பு இவைதான் என்னை இந்த அளவுக்கு முன்னேற்றியது என்பாள்.
இப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல கணவன் அமைந்துவிட்டால் வாழும் வாழ்க்கையே சுவர்க்கம் ஆகிவிடாதோ !!!!!!!!!!!!!!
முற்றும்
6 comments:
உண்மைதான், வாழ்க்கை துணை சரியாக இருந்தால் வாழ்வு அற்புதம்
நன்றி நண்பரே
எனக்கு கதை நடை தெரியாது இருப்பினும் என்னை ஊக்கப்படுத்தும் உங்களுக்கு நன்றி
இப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல கணவன் அமைந்துவிட்டால் வாழும் வாழ்க்கையே சுவர்க்கம் ஆகிவிடாதோ !!!!!!!!!!!!!!
**********************************************
ஏன் இந்த ஏக்கம்?
parattugal
polurdhayanithi
திரு. THOPPITHOPPI அவர்களே
இது ஏக்கம் அல்ல. எல்லோருக்கும் நல்ல வாழ்கை துணை கிடைக்க வேண்டும் எனும் நோக்கம் மட்டுமே
அருமையான அனுபவம்
Post a Comment