வியட்நாமிய பெண் :
நான் இங்கு வந்து 3 வருடங்கள் முடிந்த போதிலும் என்னால் இவர்களின் மொழியை கற்றுணரமுடியவில்லை. நான் பல நாட்களாகவே இங்குள்ள பெண்களுக்கும், நம் நாட்டு பெண்களுக்கும் உள்ள சில மாறுபாடுகளை பதியவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
வியட்நாம் நாடு பெரும்பாலும் (30 வருடங்களுக்கு மேலாக) தொடர்ந்து போர்க்களத்தை கண்டதால் பல விஷயங்கள் மாறிபோயுள்ளதாக என் வியட்நாமிய நண்பி கூறினாள். அது உண்மைதான் ஏனெனில், பிரஞ்சு காலனியாக இருந்ததாலும், அமெரிக்க போர் காரணமாகவும் பல கலாசார விஷயங்கள் மாறிப்போயுள்ளன.
நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்.
என்னுடைய அறிவுக்கெட்டியவரையில் நம்மூரில் இன்னும் ஆண்களுக்கு இணையாக சரிபாதியாக பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றே கருதுகிறேன். இங்குள்ள பெண்கள் செய்யும் வேலைகளை கண்டால், நான் உண்மையிலேயே இந்த வேலைகளை நம்மால் செய்ய இயலுமா என்று எண்ணி இருக்கிறேன்.
இங்குள்ள பெண்கள் இரு மற்றும் பல சக்கர வாகனங்களின் பழுது பார்க்கும் வேலை, இரவு 11 மணிவரை தெருவோர மதுக்கடைகளில் வேலை மற்றும் அணைத்து விதமான தொழிட்சாலைகளிலும் பெண்களே அதிகமாக வேலை பார்கின்றனர்.
இங்குள்ள முதியோர் தங்கள் பிள்ளைகளிடம் பணம் வாங்கி அதில் தங்கள் வாழ்கையை நடத்துவதை அவமானமாக கருதுகின்றனர். முடிந்தவரை தனி தொழில் (எதாவது கைத்தொழில்) செய்து பிழைக்கின்றனர்.
இங்கு பெண்கள் இரவு ஒரு மணிக்கு கூட தெருவில் நடமாடுகின்றனர். எந்த வித பயமோ, குற்றம் நடக்குமோ என்ற உணர்ச்சியோ இல்லை. இங்கு குற்றங்களின் எண்ணிக்கை மிக குறைவு எனலாம்.
பெண்கள் யாரும் வீட்டில் இருப்பதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்கள் கல்விக்கு ஏற்ற வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகள் ஒன்னரை வயதிலிருந்து காப்பகத்தின் துணை கொண்டே வளர்கின்றன.
பெண்ணே குழந்தையின் முழு பொறுப்பையும் ஏற்கிறாள். நான் பார்த்தவரை பொதுவாக ஆண்கள் யாரும் துணைக்கு வருவதில்லை. கல்வி வளர்ச்சி அதிகமாக உள்ளது மற்றும் இரு சாராரும் இணைந்தே எங்கும் படிக்கின்றனர்.
மத பிரச்சனை இல்லை, அதிகப்படியான மக்களுக்கு கடவுள் என்பது அவர்களின் மூதாதையர் மட்டுமே. இதன் காரணமாக மத பிரச்சனைகள் இல்லை.
இந்த பெண்களின் கல்வி அவர்கள் சார்ந்த மொழியினூடே(வியட்நாமி) பயணிக்கிறது. கல்வி கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமில்லை.
வளரும் நாடு என்பதால் இன்னும் அடிப்படை வசதிகள் மேருகேரிக்கொண்டு இருக்கின்றன. உணவு பழக்கங்களில் இவர்கள் நம்மில் இருந்து மிகவும் வித்தியாசப்படுகின்றனர்.
காரணம் நாம் அதிகமான மசாலா சேர்த்து உண்மையான சுவையை இழந்துவிடுவோம். ஆனால் இவர்கள் அனைத்தையும் அவித்தோ அல்லது வறுத்தோ உண்கின்றனர். அதிலும் எந்த வித மசாலா விஷயங்களும் சேர்ப்பதில்லை.
மாறாக இவர்கள் அதிகப்படியான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
தொடரும் ...........................
5 comments:
புதிய தகவல்கள்..தொடர்க..
வருகைக்கு நன்றி சகோ அமுதா கிருஷ்ணா அவர்களே
நேரம் இருந்தால் அவர்களுடைய கோவில், பள்ளி , காவல்நிலையம் போன்ற புகைப்படங்களையும் எங்களுக்காக போடுங்கள் தெரிந்துகொள்ள.
தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை,
தொடருங்கள்....
பகிர்வுக்கு நன்றி
நல்லா இருக்கு தொடருங்கள்! வலைத்தள முகவரி பார்த்திட்டு என்னமோ நினைச்சேன்! :-)
Post a Comment