Followers

Wednesday, June 8, 2011

பயம் என்னை விட்டு...(பெண் பார்வையில்!) - 2


வணக்கம் உறவுகளே.........



நான் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டு அந்த பெரிய விமான தளத்தின் முகப்பில் நுழைந்தேன் என் மகனுடன். அந்த வரிசையை பார்த்து தெரிந்து கொண்டேன்...விமான பயணத்துக்கும் இப்படி வரிசையில் தான் நின்று செல்ல வேண்டும் என்று!


என் துணை ஏற்கனவே சொல்லி இருந்த படியே ஆனது! அதன் படி அந்த எடை மேடையில் பொருளை வைத்து பார்க்கும் போது அது அதிகமான எடையை காட்டியதால் நான் என்ன செய்வதென்று யோசித்து கொண்டு இருந்தேன். ஆனாலும் அந்த சகோதரர் என்னை புன்முறுவலுடன் செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.


அடுத்த இடமான Immigration இடத்துக்கு சென்றோம். அங்கு அந்த அதிகாரி எதற்க்காக வியத்னாம் செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்க்கு துணைவர் சொல்ல சொன்னபடி சுற்று பயணத்துக்காக என்று கூறினேன். குழந்தயுடனா என்றார்..அதற்க்கும் ஆமாம் என்று கூறினேன்(உள்ளத்தில் ஒரு வித பயம் இருந்தது என்றாலும்!).

அங்கிருந்து விடை பெற்று மேலே இரண்டாவது மாடியை நோக்கி சென்றேன் குழந்தையுடன். அங்கே அனைவரும் அமர்ந்திருந்தனர்....அந்த இடத்தில் இருந்த அந்த தொலைக்காட்சி பெட்டியில் மலேசிய விமானம் குறித்த தகவல்களை கண்களால் துழாவினேன். என் மகன் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக அந்த கதவு திறக்கப்பட்டு விமானத்தின் உள் நுழயலானேன். உள்ளே ஏசி ரயிலின் பெட்டி போன்று நீண்டு சென்றது. எனக்கான இருக்கையை அந்த விமானப்பணிப்பெண் காட்டினாள். 


அப்பாடா என்று மூச்சி விட்டேன்....ஒரு வழியாக உட்காந்தாயிற்று....என் அம்மாவை தொலை பேசியில் அழைத்து சொல்லி விட்டேன். இப்போது துணையிடம் இருந்து வந்த அழைப்பிலும் சொல்லியாயிற்று. அந்த விமானப்பெண் என்னருகில் வந்து கைப்பேசியை அணைக்கும் படி கூறினாள். பின் அந்த இடுப்பில் அணியும் பெல்டை அணியவிட்டு சென்றாள்.


பயணம் ஆரம்பித்தது.....விமானம் ஓடு தள பாதையில் ஓடி சிறிது சிறிதாக மேலெழும்ப தொடங்கியது.......என் அடிவயிற்றில் எதோ இனம் புரியாத பட படப்பு...பட்டாம் பூசிகள் திடீரென சிறகடிப்பது போல் உணர்ந்தேன்...ஒரு வித பயம் கலந்த படபடப்புடன் என் மகனை பார்த்தேன் அவன் என்னையே ஒரு வித மாக பார்த்து கொண்டு இருந்தான்.....ஏனெனில் உயர பறக்கும் போது காத்து அடைபட்டது காரணமாக இருந்திருக்கும் என்று புரிந்தது......நானும் இப்போது ஒரு பறவை போல எனக்கு தோன்றியது!


பல ஆயிரம் அடிகளுக்கு மேல நான் முதல் முறையாக....பறந்து கொண்டு இருக்கிறேன்..இது கனவா இல்லை நினைவா..ஆண்டவா நல்ல படியாக போய் சேர வேண்டும் வியட்நாமுக்கு!

உறவுகளே தொடர்வேன்......

துணைவர் பகுதி: நண்பர்ஸ்!... மேடம் எனக்கு பதிவுலகத்துல சீனியர்......அவங்கள பாத்து தான் நான் சும்மா ஜாலிக்கு எழுத ஆரம்பிச்சேன்...இப்போ அவங்களோட எழுத்துக்கள இங்க பதியரதுல நான் பெருப்படறேன் நன்றி! 

படங்களுக்கு உதவிய Google images க்கு நன்றி. 

9 comments:

ராஜி said...

மதனிக்கு வணக்கம் (சகொதரரின் மனைவி மதனி. அதான் உங்களை அப்படி விளித்தேன்.) பதிவு அருமை. எழுத்து நடையும் அருமை. எழுத்டுப்பணி தொடர வாழ்த்துக்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

@ராஜி

பதிவுக்கு தாங்கள் வந்து தங்கள் பின்னூட்டம் இட்டதற்கு நன்றிங்க...சகோ!

வாழ்த்துகளுக்கும் நன்றி!

ராஜி said...

விக்கி உலகம் said...

@ராஜி

பதிவுக்கு தாங்கள் வந்து தங்கள் பின்னூட்டம் இட்டதற்கு நன்றிங்க...சகோ!

வாழ்த்துகளுக்கும் நன்றி!
மதனிக்கும், நாத்திக்குமிடையில் ஆயிரம் விஷயம் இருக்கும். நீங்க ஏன் இடையில் வர்றீங்க சகோ

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா தக்காளியை திட்ட வழி இல்லாம போச்சே

விஷாலி said...

@ராஜி

வாங்க வாங்க சகோ எப்படி இருக்கீங்க!

விஷாலி said...

@சி.பி.செந்தில்குமார்

வருகைக்கு நன்றி சகோதரரே!

ஆமினா said...

//அந்த இடத்தில் இருந்த அந்த தொலைக்காட்சி பெட்டியில் மலேசிய விமானம் குறித்த தகவல்களை கண்களால் துழாவினேன். என் மகன் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தான்//

என் முதல் பயண அனுபவமும் இதே பாணியில் தான் ;-)

நல்ல எழுத்து நடை வாழ்த்துக்கள்

ஆமினா said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரம் இருக்கும் போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_25.html