வணக்கம் உறவுகளே,
எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் பல்லாயிரம் விஷயங்கள் வந்து சென்று கொண்டு இருக்கின்றன. அப்படி என் நண்பியின் வாழ்கையில் ஏற்ப்பட்ட நிகழ்ச்சியே இந்த பதிவு.
அவள் பெயர் புனிதா அழகு மற்றும் அறிவு ஒரு சேர அருளினான் ஆண்டவன். அதனை விட அவளிடம் இருந்த அடக்கம் அவளை மற்றவர் முன் நிலை நிறுத்தியது. படித்தது பட்ட மேற்ப்படிப்பு என்றாலும் அவளுடைய பேச்சுக்கள் பாமர மக்களை போல வெகுளித்தனமாக இருந்து வந்தது.
இதனிடையில் வரன் வந்ததால் பேசி முடித்தனர். வீட்டுக்கு ஒரே பெண் என்ற காரணத்தால் எல்லா விதமான விஷயங்களையும்(வர தட்சணை!) செய்ய அவளுடைய தந்தை முயன்றார்.
மாப்பிளை மின்சார வாரியத்தில் அதிகாரியாக இருக்கிறார் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அரசு அலுவல், பிரச்னை இல்லாத வாழ்கை ஒரே மகன் வீட்டுக்கு என்பதால் எல்லோருக்கும் மிகவும் பிடித்து போயிற்று. புனிதாவுக்கும் மாப்பிள்ளையை பிடித்து போயிற்று. திருமணம் செவ்வனே நடந்தேறியது.
கணவராக வந்தவரின் பாச மழையில் திளைத்தால் புனிதா. இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ என்று சுற்றத்தாரிடமும், நட்புகளிடமும் ஆனந்தப்பட்டாள்.
ஒரு வருடம் கழித்து ஆண் குழந்தையை ஈன்றாள். அழகு குழந்தை ஆசை கணவன் என்று சந்தோஷத்துடன் போய் கொண்டு இருந்த வாழ்கையில் புயல் வீச ஆரம்பித்தது.
கணவர் வேலை செய்யும் இடத்தில் புதிதாக ஒரு பெண் வேலைக்கு சேர்ந்தாள். அவளின் பேச்சும், அழகும் புனிதாவின் கணவரை மெல்ல மெல்ல அவள் பக்கமாக மனசு அலை பாய ஆரம்பித்தது. அந்தப்பெண்ணும் இவரை விரும்புவதாக சொல்லி சென்றாள்.
புனிதாவின் கணவனின் பேச்சுக்கள் திசை மாறின. அன்பை மட்டுமே பொழிந்து வந்த அவன் கொஞ்ச கொஞ்சமாக வார்த்தைகளில் விஷ அம்புகளை செலுத்த ஆரம்பித்தான். காரணமே இல்லாமல் அவளை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தான். காரணம் புரியாத புனிதா பல நாட்களாக அதனை பொறுத்து வந்தாள்.
ஒரு நாள் சமையலறை சென்றவள் காஸின் நெடி துளைத்ததை கண்டு பதறினாள். உடனே அந்த அறையை விட்டு வெளியேற நினைத்து திரும்பியவளுக்கு இன்னொரு அதிர்ச்சி, அவள் உள் சென்றவுடன் வெளிப்பக்கமாக் மூடப்பட்டது. பதற்றத்தில் ஜன்னல் கதவுகளை திறக்க கூட அவளுக்கு தோன்ற வில்லை.
கதவை பெரிய அளவில் தட்டிப்பார்த்தாள், முடியவில்லை..அந்த நேரம் வீட்டுக்கு வந்த சொந்தக்கார பய்யன் கதவின் சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்தான். கதவை திறந்து விட்டான். கதவின் தாழிடும் இடத்து பக்கத்தில் சில தீக்குச்சிகள் கிடந்தன. அவைகளுக்கு எரிய மனமில்லை போலும்.
உடனே விஷயத்தை புரிந்து கொண்ட அந்த பையன்(வயது 19) அவளை குழந்தையுடன் அழைத்துக்கொண்டு வந்து அவளின் பெற்றோரிடம் சேர்த்தான்.
அந்த நிகழ்ச்சி நடக்கும் போது அந்த வீட்டில் யாரும் இல்லை. திட்ட மிட்ட செயலோ என்று பதறிய பெரியவர்கள்..அந்த மிருகத்திடம் சமரசம் பேசி என்ன தான் தீர்வு என்று கேட்கலாயினர்.
அதற்க்கு அந்த கணவரின் பதில் என்ன தெரியுமா..
எனக்கு இவளை பிடிக்க வில்லை எனவே எனக்கு தேவை விவாகரத்து. நீங்கள் அதனை மறுக்கும் பட்சத்தில் இவள் ஒரு நடத்தை கெட்டவள் என்று பிரகடனப்படுத்துவேன். என்னை எல்லோரும் நம்புவார்கள் என்று உரக்க சிரித்தாராம்.
இதற்க்கு பின் என்ன செய்வது என்று எண்ணிய அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் தான் வாங்கிய வரதட்சணை மற்றும் திருமணத்துக்கு அவர்களுக்கு ஆன செலவு போன்றவைகளை(பணமாக!) அளித்து விட்டாராம். அதனை ஏற்க்க மறுத்து நீதி மன்றம் செல்லுவதாக இருந்தால் அது அந்த குடும்பத்துக்கு தான் பிரச்னை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டானாம்(அவனுக்கு என்ன மரியாதை!).
ஆடிப்போன அந்த பெண் விவகாரத்தில் கையெழுத்து இட்டு கொடுத்து விட்டு இன்று தனி மரமாக 30 வயதில்(குழந்தையுடன்) குடும்பத்துடன் வாழாவெட்டி என்ற அவசொல்லுடன் வாழ்ந்து வருகிறாள்.
இதில் நான் கேட்க்க விரும்பும் கேள்விகள்:
வெறும் உடலுக்காகத்தான் வாழ்கையா
அந்த மனிதனின்(!) காம உணர்வு திருமணத்துக்கு பின் இன்னொரு பெண்ணின் அழகு வசீகரிக்கும் போது தான் மீண்டும் எழுந்ததா?
பெண்களை எள்ளி நகையாடும் பலர் வெறும் கவர்சிக்க்காகத்தான் பின் அலைகிறார்களா
பெண் தவறு செய்தால் அதை அதிகப்படியாக விமர்சிக்கும் ஆண்களை என் செய்வது
இப்படிப்பட்ட ஆண்களை என்ன செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் அளிப்பதாக சொல்லும் ஆண்(!) அவளுக்கு கன்னித்தன்மையை மீண்டும் அளிக்க முடியுமா!
மிச்சம்: இவை ஆறா வடுக்களாக என் மனதில் இருந்தவைகள்...பொறுமையுடன் படித்ததுக்கு நன்றிகள். இந்த கருத்துக்கள் எல்லா ஆண்களையும் குறிப்பதல்ல நன்றி.
வித்யா குமார்
9 comments:
அவனை மனிதன் என்ற அடையாளத்தில் நிறுத்தாதீர்கள்... வெளியில் வந்த விஷயங்கள் குறைவு என்று நினைக்கிறேன்... ஆகையால் இதற்க்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை...
மனம் கனக்கிறது.
ஒரு பொருளின் மீது உள்ள மோகம் அடுத்த புதிய பொருள் வரும் வரை தான். ஆனால் பெண்களையுமா அப்படி நடத்த வேண்டும்?
//இந்த கருத்துக்கள் எல்லா ஆண்களையும் குறிப்பதல்ல நன்றி.
//
அவனைப்போன்ற பல ஜென்மங்கள் இந்த சமூதாயத்தில் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன
அந்த அக்காவின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமைய இறைவனிடம் பிராத்திக்கின்றேன்
இப்படியும் மனிதர்கள் மிருகக் குணத்தில் வாழ்வது மனதைக் கலங்க செய்கிறது....
காமம் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான். அதன்பின் வாழ்க்கைத் துணையின் அன்பே தேவை என்பதை அறியாமல் பலர் இப்படித்தான் மிருகங்களாய் நடந்து கொள்கிறார்கள்...
ஆணா இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அன்பை பார்க்காமல் காமத்தை மட்டுமே பார்ப்பது தவறு... இந்த பதிவில் கணவன் செய்தது முற்றிலும் தவறு... அவன் மனிதனே அல்ல... அன்பை புரிந்துகொள்ளாமல் இச்சைக்கு அலையும் இவனைப்போன்றோருக்கு என்றாவது தண்டனை உண்டு... பகிர்வுக்கு நன்றி
இப்பிடி ஆளு கூட வாழுறதை விட பிரிஞ்சே இருக்கிறது ரொம்ப நல்லது. என்னைக்காவது திரும்பி வந்தா செருப்பால அடிச்சி விரட்டி விட சொல்லுங்க
அப்பேர்பட்ட சிந்தனையாளர் சாக்ரட்டீஸ் பெண்களை பற்றி என்ன சொன்னார்... ஆண்களின் போகப் பொருள் என்று...
நமது நாட்டில் அன்றாடம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை அறியும்போது
இப்போது பலர் இந்த மனநிலைக்கு செல்வது புரிகிறது...
எதிர்காலம்?????
மனம் கனக்கிறது.
Post a Comment