Followers

Wednesday, October 19, 2011

பெண் என்றால் கேவலமா!?

வணக்கம் உறவுகளே,


Saturday, October 15, 2011

பஞ்சமுகம் பார்க்க வாரீர்!

வணக்கம் உறவுகளே,



Wednesday, June 8, 2011

பயம் என்னை விட்டு...(பெண் பார்வையில்!) - 2


வணக்கம் உறவுகளே.........

Tuesday, June 7, 2011

பயம் என்பது எப்படி என்னை விட்டு போனது!


வணக்கம் உறவுகளே.. 

Monday, June 6, 2011

வலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....

வலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....

உங்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள்..........மீண்டும் திரும்ப வந்து விட்டேன் வியட்நாமுக்கு.......தாங்கள் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

பல மாதங்களாக இந்தியாவில் சொந்த வேலைகள் காரணமாக தங்க வேண்டியதாகிவிட்டது. இதற்கிடையில் என் துணை( விக்கி உலகம் ) பதிவுலகில் தெரிய ஆரம்பித்திருக்கிறார் போல.

மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.......இனி பதிவுகள் தொடரும்.......

Wednesday, February 2, 2011

நான் வாழும் நாடு(living country!?)

நான் வாழும் நாட்டைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு அதனை தெளிவாக அடுத்தவங்களுக்கும் தெரிவிக்கனும்னு எண்ணியதன் விளைவே இந்த தொடர்.


தொழில் நிமித்தமாக தற்போது வாழும் நாடு - வியட்நாம்.
மக்கள் தொகை - 86 மில்லியன்
பேசும் மொழி - வியத்னாமீஸ்
உலகிலேயே பிரசித்தி பெற்ற நாடுகளின் வரிசையில் - 13 வது இடம்
உலகில் உள்ள சந்தோசமான மக்கள் வாழும் வரிசையில் - 5 வது இடம்
நல்லா கவனிங்க மக்கள் சந்தோஷமானவங்க.

அழகிய நாட்டுக்கு சொந்தக்காரங்க இந்த வியத்நாமியர்கள்.


இந்த நாட்டைப்பற்றி நான் என் சிறு வயது பாடப்புத்தகத்தில் மட்டுமே அறிந்து இருந்தேன். அப்போது தெரியாது இங்கு வந்து உலை வைத்து சாப்பிடப்போகிறேன் என்று.

அந்தப்பாடப்புத்தகதிலும் வியத்னாம் என்பதை ஒரு போர் நாடாக மட்டுமே அறிந்திருந்தேன்......இன்று வேலை நிமித்தமாக இங்கு தங்க வேண்டிவந்ததால் சற்று இந்த நாட்டைப்பற்றி நான் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கி.பி 938 பிறகு சீன நாட்டிடம் இருந்து தனியே பிரிந்து தனி நாடானது வியத்னாம். அதட்க்குப்பிறகும் ஒரு புறம் பிரான்சு ஆதிக்கமும் மறுபுறம் கம்யுனிச ஆதிக்கமும் குடிகொண்டு இருந்தது.


1945 மற்றும் 1954 வருடங்களில் ஏற்பட்ட பிரான்சுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் இருந்து $2.6 பில்லியன் டாலர்களை உதவியாகப்பெற்றது. இதை வைத்து பிரான்சை வீழ்த்தியது......பின்பு ஏற்பட்ட அமைதி உடன்படிக்கைப்படி வடக்கு, தெற்க்கு என தற்காலிகமாக இரு நாடுகளாக பிரிக்கப்பட்டன. கம்யுனிசம் இல்லாத நாடு ஒரு புறமும், கம்யுனிச கொள்கைகொண்ட நாடு மறுபுறமும் எனப்பிரிந்தது. 1956 இல் பொதுவான தேர்தலுக்கு தெற்க்கு நாட்டை சேர்ந்தவர்கள் ஒத்துவர(அமெரிக்க துணை இருந்ததால்!) மறுத்தனர் இதனை அமெரிக்காவும் ஆதரித்தது.

1958 இல் வடக்கு தெற்க்கு மீது போர் தொடுத்தது.......அப்போது தான் "வியட்கோங்" என்றழைக்கப்படும் கம்யுனிச கொரில்லாக்கள் உருவாயினர். 1963 தெற்க்கு நாட்டவரிடம்  இருந்து மேகாங் எனப்படும் வளமான இடத்தை வென்றது வடக்கு.

ஜனவரி 1973 அமெரிக்கா, போரை நிறுத்தி கொள்வதாகவும் தங்கள் படைவீரர்களை விடுதலை செய்யும் படியும் கேட்டுக்கொண்டது. இதன் பிறகு 1975 ஏப்ரல் தெற்க்கு, வடக்கிடம் சரணடைந்தது. இதன் பிறகு வியத்னாம் முழு நாடாக உருப்பெற்றது.

இந்த தொடர் போர் மற்றும் பிகப்பெரிய வல்லரசு எனசொல்ப்பட்ட நாடு ஏன் பின் வாங்கியது, இவர்களின் போர் முறை எப்படிப்பட்டது, அப்பாவி மக்கள் எப்படி ஆயுதம் எடுத்து போராடினர், பெண்களின் மிகப்பெரிய பங்கு என்ன போன்ற.......பல கேள்விகள் எழும் என்று நினைக்கிறேன்........அதைப்பற்றிய தொடர்தான் இது...........

இது ஆரம்பம் மட்டுமே இனி பல உண்மைகள நீங்க தெரிஞ்சிக்கப்போறீங்க.....காத்திருங்கள்.....

தொடரும்.....

Tuesday, February 1, 2011

இந்த தளம் ஹேக் செய்யப்படுகிறது(!?)

வணக்கமுங்க...........ரொம்ப நாளா இந்த தளத்துல எந்தப்பதிவும் போடாம விட்டுட்டாங்க என்மனைவி...காரணம் அவங்க இந்தியாக்கு போயிட்டு திரும்பி வநத உடனே இன்னொரு உறவுமுறை விஷயமா திரும்பி இந்தியா செல்ல வேண்டியாகிட்டுது..............

கிட்டத்தட்ட ஏப்ரல் மாதத்துல தான் திரும்புவேன்னு சொல்லிட்டாங்க.............

நீங்கல்லாம் ஒரு மனுஷன்.......உங்க வேலைய(உறவுகளின் அலுவல்கள்!!) நான் இங்க பாக்கறேன் ஆனா என் ப்ளோக்ல ஏதாவது உருப்படியா பதிவு போட்டா குறைஞ்சா போயிடுவீங்கன்னு இன்னைக்கு வடக்கும், தெற்குமா என்ன கிழிச்சி புட்டாங்க.............

நான் என்ன அவங்க மாதிரி உணர்வுகள் பிரதிபலிக்கிற அளவுக்கு அறிவாளியா.............சரி முயற்சி பண்றேன்.........அப்படின்னு சொல்லி இருக்கேன்...............

இன்று முதல் இந்த தளத்த நான் ஹேக் செய்யறேன்........என் அறிவுக்கு உகந்த விஷயங்கள பதியிறேன்...........தயவு செய்து சில மாதங்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கிறேன்...............

உங்க கருத்துகள தெரிவியுங்கள்,,,,,,,,,,,,,

நன்றி