Followers

Thursday, March 8, 2012

பயம் - (F)


வணக்கம் உறவுகளே.. 

நான் வாழும் நாடு(country)

நான் வாழும் நாட்டைப்பற்றி நன்கு அறிந்து கொண்டு அதனை தெளிவாக அடுத்தவங்களுக்கும் தெரிவிக்கனும்னு எண்ணியதன் விளைவே இந்த தொடர்.


தொழில் நிமித்தமாக தற்போது வாழும் நாடு - வியட்நாம்.
மக்கள் தொகை - 86 மில்லியன்
பேசும் மொழி - வியத்னாமீஸ்
உலகிலேயே பிரசித்தி பெற்ற நாடுகளின் வரிசையில் - 13 வது இடம்
உலகில் உள்ள சந்தோசமான மக்கள் வாழும் வரிசையில் - 5 வது இடம்
நல்லா கவனிங்க மக்கள் சந்தோஷமானவங்க.

அழகிய நாட்டுக்கு சொந்தக்காரங்க இந்த வியத்நாமியர்கள்.


இந்த நாட்டைப்பற்றி நான் என் சிறு வயது பாடப்புத்தகத்தில் மட்டுமே அறிந்து இருந்தேன். அப்போது தெரியாது இங்கு வந்து உலை வைத்து சாப்பிடப்போகிறேன் என்று.

அந்தப்பாடப்புத்தகதிலும் வியத்னாம் என்பதை ஒரு போர் நாடாக மட்டுமே அறிந்திருந்தேன்......இன்று வேலை நிமித்தமாக இங்கு தங்க வேண்டிவந்ததால் சற்று இந்த நாட்டைப்பற்றி நான் அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


கி.பி 938 பிறகு சீன நாட்டிடம் இருந்து தனியே பிரிந்து தனி நாடானது வியத்னாம். அதட்க்குப்பிறகும் ஒரு புறம் பிரான்சு ஆதிக்கமும் மறுபுறம் கம்யுனிச ஆதிக்கமும் குடிகொண்டு இருந்தது.


1945 மற்றும் 1954 வருடங்களில் ஏற்பட்ட பிரான்சுக்கு எதிரான போரில் அமெரிக்காவிடம் இருந்து $2.6 பில்லியன் டாலர்களை உதவியாகப்பெற்றது. இதை வைத்து பிரான்சை வீழ்த்தியது......பின்பு ஏற்பட்ட அமைதி உடன்படிக்கைப்படி வடக்கு, தெற்க்கு என தற்காலிகமாக இரு நாடுகளாக பிரிக்கப்பட்டன. கம்யுனிசம் இல்லாத நாடு ஒரு புறமும், கம்யுனிச கொள்கைகொண்ட நாடு மறுபுறமும் எனப்பிரிந்தது. 1956 இல் பொதுவான தேர்தலுக்கு தெற்க்கு நாட்டை சேர்ந்தவர்கள் ஒத்துவர(அமெரிக்க துணை இருந்ததால்!) மறுத்தனர் இதனை அமெரிக்காவும் ஆதரித்தது.

1958 இல் வடக்கு தெற்க்கு மீது போர் தொடுத்தது.......அப்போது தான் "வியட்கோங்" என்றழைக்கப்படும் கம்யுனிச கொரில்லாக்கள் உருவாயினர். 1963 தெற்க்கு நாட்டவரிடம்  இருந்து மேகாங் எனப்படும் வளமான இடத்தை வென்றது வடக்கு.

ஜனவரி 1973 அமெரிக்கா, போரை நிறுத்தி கொள்வதாகவும் தங்கள் படைவீரர்களை விடுதலை செய்யும் படியும் கேட்டுக்கொண்டது. இதன் பிறகு 1975 ஏப்ரல் தெற்க்கு, வடக்கிடம் சரணடைந்தது. இதன் பிறகு வியத்னாம் முழு நாடாக உருப்பெற்றது.

இந்த தொடர் போர் மற்றும் பிகப்பெரிய வல்லரசு எனசொல்ப்பட்ட நாடு ஏன் பின் வாங்கியது, இவர்களின் போர் முறை எப்படிப்பட்டது, அப்பாவி மக்கள் எப்படி ஆயுதம் எடுத்து போராடினர், பெண்களின் மிகப்பெரிய பங்கு என்ன போன்ற.......பல கேள்விகள் எழும் என்று நினைக்கிறேன்........அதைப்பற்றிய தொடர்தான் இது...........

இது ஆரம்பம் மட்டுமே இனி பல உண்மைகள நீங்க தெரிஞ்சிக்கப்போறீங்க.....காத்திருங்கள்.....

தொடரும்.....

ஒரு பெண்ணின் விழிவழியே வியட்நாம் (vietnam)

வியட்நாமிய பெண் :


நான் இங்கு வந்து 3 வருடங்கள் முடிந்த போதிலும் என்னால் இவர்களின் மொழியை கற்றுணரமுடியவில்லை. நான் பல நாட்களாகவே இங்குள்ள பெண்களுக்கும், நம் நாட்டு பெண்களுக்கும் உள்ள சில மாறுபாடுகளை பதியவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்


வியட்நாம் நாடு பெரும்பாலும் (30 வருடங்களுக்கு மேலாக) தொடர்ந்து போர்க்களத்தை கண்டதால் பல விஷயங்கள் மாறிபோயுள்ளதாக என் வியட்நாமிய நண்பி கூறினாள். அது உண்மைதான் ஏனெனில், பிரஞ்சு காலனியாக இருந்ததாலும், அமெரிக்க போர் காரணமாகவும் பல கலாசார விஷயங்கள் மாறிப்போயுள்ளன 

நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்

என்னுடைய அறிவுக்கெட்டியவரையில் நம்மூரில் இன்னும் ஆண்களுக்கு இணையாக சரிபாதியாக பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றே கருதுகிறேன். இங்குள்ள பெண்கள் செய்யும் வேலைகளை கண்டால், நான் உண்மையிலேயே இந்த வேலைகளை நம்மால் செய்ய இயலுமா என்று எண்ணி இருக்கிறேன்.

இங்குள்ள பெண்கள் இரு மற்றும் பல சக்கர வாகனங்களின் பழுது பார்க்கும் வேலை, இரவு 11 மணிவரை தெருவோர மதுக்கடைகளில் வேலை மற்றும் அணைத்து விதமான தொழிட்சாலைகளிலும் பெண்களே அதிகமாக வேலை பார்கின்றனர்.
இங்குள்ள முதியோர் தங்கள் பிள்ளைகளிடம் பணம் வாங்கி அதில் தங்கள் வாழ்கையை நடத்துவதை அவமானமாக கருதுகின்றனர். முடிந்தவரை தனி தொழில் (எதாவது கைத்தொழில்) செய்து பிழைக்கின்றனர்.

இங்கு பெண்கள் இரவு ஒரு மணிக்கு கூட தெருவில் நடமாடுகின்றனர். எந்த வித பயமோ, குற்றம் நடக்குமோ என்ற உணர்ச்சியோ இல்லை. இங்கு குற்றங்களின் எண்ணிக்கை மிக குறைவு எனலாம்
பெண்கள் யாரும் வீட்டில் இருப்பதில்லை. கணவன், மனைவி இருவரும் தங்கள் கல்விக்கு ஏற்ற வேலைக்கு செல்கின்றனர். குழந்தைகள் ஒன்னரை வயதிலிருந்து காப்பகத்தின் துணை கொண்டே வளர்கின்றன

பெண்ணே குழந்தையின் முழு பொறுப்பையும் ஏற்கிறாள். நான் பார்த்தவரை பொதுவாக ஆண்கள் யாரும் துணைக்கு வருவதில்லை. கல்வி வளர்ச்சி அதிகமாக உள்ளது மற்றும்   இரு சாராரும் இணைந்தே எங்கும் படிக்கின்றனர்.  
மத பிரச்சனை இல்லை, அதிகப்படியான மக்களுக்கு கடவுள் என்பது அவர்களின் மூதாதையர் மட்டுமே. இதன் காரணமாக மத பிரச்சனைகள் இல்லை

இந்த பெண்களின் கல்வி அவர்கள் சார்ந்த மொழியினூடே(வியட்நாமி) பயணிக்கிறது. கல்வி கேள்விகளில் ஆண் பெண் என்ற பேதமில்லை
வளரும் நாடு என்பதால் இன்னும் அடிப்படை வசதிகள் மேருகேரிக்கொண்டு இருக்கின்றன. உணவு பழக்கங்களில் இவர்கள் நம்மில் இருந்து மிகவும் வித்தியாசப்படுகின்றனர்.

காரணம் நாம் அதிகமான மசாலா சேர்த்து உண்மையான சுவையை இழந்துவிடுவோம்.  ஆனால் இவர்கள்  அனைத்தையும் அவித்தோ அல்லது வறுத்தோ உண்கின்றனர். அதிலும் எந்த வித மசாலா விஷயங்களும் சேர்ப்பதில்லை

மாறாக இவர்கள் அதிகப்படியான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்
  
தொடரும் ...........................





Saturday, March 3, 2012

காபி Morning - Vietnam இந்திய பெண்களின் முயற்சி!

வணக்கம் உறவுகளே,

ல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.