Followers

Wednesday, November 3, 2010

பெண் – வாழ்க்கையே ஓர் நெடிய பயணம் (கதையல்ல உண்மை)

என்னை போன்ற கதை (கதையல்ல நிஜம்) நடை தெரியாதவரையும் அரவணைத்தும், உற்சாகப்படுத்தி  கொண்டும் இருக்கும் சான்றோருக்கு நன்றி

நான் பொதுவாக கதை எழுத தெரியாதவள். ஆனால் நான் என் வாழ்வில் கண்ட பெண்களின் வாழ்க்கை பாதையை அவர்களின் துணைகொண்டு எழுதி வருகிறேன்(நம்முடன் வாழ்பர்களிடம் நிறைய ஏற்ற இறக்க விஷயங்கள் உள்ளன அவை - உங்கள் பார்வைக்கு - இதுவே இந்த தளத்தின் குறிக்கோள்)

பெண் வெறும் வீட்டு அடிமையல்ல என்று நிரூபித்த ஒரு பெண்ணை பற்றிய பதிவு.

நான் சந்தித்த ஒரு பெண்மணியின் 
நினைவுக்குறிப்பிளிருந்து அப்பெண்மணியின் உண்மை வாழ்க்கை உங்க பார்வைக்கு

ஜோவென மழை பெய்து கொண்டு இருந்தது.

ஏம்மா எங்க போய்ட்டா இந்த சரோ - குரல் கணீர் என்று வந்தது.
என்னங்க மறந்துட்டீங்களா  இன்னிக்கு அவங்க பள்ளியில விளையாட்டு தினம். அது தான் நேரம் கழிச்சிதான் வருவேன்னு காலையிலேயே சொல்லிட்டு போய்ட்டா

ம்ம்……………7 பெத்து என்ன பிரோஜனம் ஒன்னு மட்டும் தான் படிக்குது. மத்தது எல்லாம்  வேலைக்கு போயிடுச்சிக.

இவளாவது நல்ல நிலமைக்கு வரணும். ஒரு சாதாரண இசைகலைஞரின் அவா அது

சரோஜா படிப்பில் நல்ல சுட்டி மற்றும் விளையாட்டிலும் நல்ல ஆர்வமுடையவள். அவள் குடும்பத்தில் அவளோடு கூட பிறந்தவர்கள் மொத்தம் 7  பேர். பெரிய குடும்பம் ஆனால் நடுத்தர வர்கத்திட்கும் கீழாக இருந்தது அவர்களின் நிதி நிலைமை

1960 களில் அவள் தன்னுடைய பள்ளிபடிப்பிட்காக போராடி வந்தாள். அக்காலத்தில் பெண் கல்வி ஒன்றும் எளிதாக அமைந்து விடவில்லை அவளுக்கு. ஆனாலும் அவளுடைய விடா முயற்சியின் பலனாக அவளால் 12 ஆம் வகுப்பு வரை செல்ல முடிந்தது. குடும்பத்தில் மற்ற அங்கத்தினர்கள் 8 வது தாண்டவில்லை. அப்போது அவளுக்கு ஆசிரியை பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கான செலவுகளை சரோஜாவின் அப்பாவால் கொடுக்க இயலாது போனது. அவள் அப்பா ஒரு இசைக்கலைஞர் (ormonist) அக்காலகட்டத்தில் அவருக்கு கிடைத்த சொற்ப காசைகொண்டு அவர்கள் குடும்பம் சென்னையில் வசித்து வந்தது

என்னதான் அவள் ஆசிரியை வாய்ப்பை இழந்தாலும் அவளுடைய நம்பிக்கையை யாராலும் உடைக்க இயலவில்லை. அவள் மற்றவர்களிடம் இருந்து வித்யாசப்பட்டவளாக தெரிந்தாள். அவளுடைய குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு செல்லவேண்டி ஆனது. வீட்டில் 2 ஆண் மற்றும் 5 பெண் எல்லோரும் வேலைக்கு செல்லலாயினர். அப்போதே ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் மேற்பார்வையளராக சரோஜாக்கு வேலை கிடைத்தது. தன்னை யார் மதித்து பேசுகிறார்களோ அவர்களுக்கு அவளுடைய மரியாதையை என்றும் உண்டு. பெண்தானே என்று பேசுபவர்களுக்கு நிச்சயம் எதிர்பதம் உண்டு. அக்காலத்தில் அவளை பார்த்தாலே பயம் கலந்த மரியாதையை அவளுடன் பணியாற்றியவர்களுக்கு இருந்தது. அவளுடைய தைரியமான பேச்சு, நடை, உடை , பார்வை பார்த்தே ஆண்கள் ஒதுங்கலாயினர். அது அவளுக்கு தன் மேல் அசைக்க முடியாத மனோ பலத்தை கொடுத்தது


என்னம்மா சரோ எப்படி இருக்கே - மேலாளரின் குரல் வழிந்து கேட்டது.   நல்லா இருக்கேன் சார் ஏன் உங்களுக்கு எதாவது உதவி தேவைபடுதா?

அய்யயோ இல்லம்மா சும்மா தான் கேட்டேன்.  

அந்த மேலாளர் அவளுடைய வறுமையை பயன்படுத்தி விளையாட நினைத்து அடிவாங்கியவர்


அவருக்கு வாங்கிய அடியைவிட அவள் சொன்ன வார்த்தை சுட்டெரித்தது (ஏன்டா உன் மனைவிய வேலைக்கு தானே அனுப்புற இல்ல வேற எங்காவதா).

சென்னையில் ஒரு மழைகாலம்:

இளமைக்கால நினைவுகள் அவள் கண்ணில் வந்து சென்றன. என்ன பாட்டி இப்போ எப்படி இருக்கு - கேட்டாள் அந்த வேலைக்கார பெண். நேத்து தான் முடியாம போச்சி திடிர்னு நெஞ்சு வலி என் நேரம் நான் பிழச்சுகிட்டேன். ஏன் அப்படி சொல்றீங்க ………….

இல்லம்மா என்னால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது.

ஆனா நான் இப்போ இங்க உங்களுக்கு எவ்ளோ கஷ்டம் குடுக்குறேன் பாரு

என்ன பாட்டி அப்படி சொல்லிட்டீங்க

உங்கள போல வயதானவங்களுக்கு சேவை செய்யறது பெரிய புண்ணியம் என்றாள் அந்த பெண்

இப்போது பாட்டிக்கு கிட்டத்தட்ட 65 வயது.

தன் சொந்தங்களை கூட தப்பாக நினைத்து பார்க்காத அவளுடைய பெருந்தன்மையை நினைத்தே அந்த பணிப்பெண் அவ்வாறு கூறினாள்

தொடரும் ...................

1 comments: