Followers

Saturday, March 3, 2012

காபி Morning - Vietnam இந்திய பெண்களின் முயற்சி!

வணக்கம் உறவுகளே,

ல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள்.


நெடு நாட்களாக பதிவுகளின் பக்கம் வராமல் இருந்தேன். காரணம் நான் என் சொந்த முயற்சியில் நடத்திவரும் அழகு நிலையம். வீட்டில் இருந்த படியே எங்கள் வீட்டிற்க்கு வரும் நண்பிகளுக்கு இந்த அழகு படுத்துதல் விஷயத்தை செய்து வருகிறேன். இதன் காரணமாக பதிவு எனும் விஷயம் என்னை விட்டு ஒதுங்கி விட்டது.


இன்றைய காலகட்டத்தில் திருமணமான பெண்கள் வெளியே சென்று குழுவாக ஏதாவது நல்ல விஷயங்களில் ஈடுபட்டாலும், அதனை கேலிக்குரிய விஷயமாகவே பார்கின்றனர்(என்னவரை சொல்லவில்லை!). அதுவும் இப்படி மொழி புரியாத நாட்டில் இருக்கும் குடும்பதலைவிகளின் நிலைமை கஷ்டமே. இதை தவிர்க்க இங்கு இருக்கும் இந்திய பெண்கள் யோசித்தோம். அதாவது பெண்களுக்கு வீடு மட்டுமே இருப்பை காட்டிக்கொளும் இடம் என்பதை மாற்ற நினைத்தோம்.

இதற்க்கான முதல் முயற்சியாக "காபி மார்னிங்" - இந்த வாரத்தின் ஆரம்ப நாளில் அழைத்து இருந்தார்கள். இதன் மூலம் முதலில் எவ்வளவு பெண்கள், பெண்களுக்கான எழுச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள் என்று முடிவு செய்தோம். இதற்க்கு உறுதுணையாக இருந்தது இங்கிருக்கும் "வியட்நாம் வாழ் இந்தியர்களின் நல அமைப்பு" ஏற்பாடு செய்து கொடுத்தது.


காலை 10 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சியில் மூத்தவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளித்தது. சிறிய சிற்றுண்டியுடன் ஆரம்பமான நிகழ்ச்சி உரையாடல்களில் சந்தோசம் மிகுந்து காணப்பட்டது. பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியில் 20 பேர் கலந்து கொண்டனர் .

முடிவு செய்த விஷயங்கள்:

இங்கு இருக்கும் பெண்களுக்கு உகந்த விளையாட்டு விஷயங்கள் - எ.கா - பூபந்து விளயாட ஏற்பாடு.

- இதன் மூலம் உடல் பருமனை குறைக்க ஏதுவாகும் என்று அனைவரும் முடிவு செய்தோம். வசதி படைத்தவர்கள் உடல் பயிற்சி செய்ய தனி இடம் இருந்தாலும், சோம்பலின் காரணமாக தவிர்த்து விடுகின்றனர். இதை மாற்றவே இந்த முடிவு.


 படித்து விட்டு இங்கிருக்கும் பலர் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பொழுதை கழிப்பதை தவிர்த்து. வியட்நாமிய குழந்தைகளுக்கு பகுதி நேர ஆங்கில பாடம் பள்ளிகளில் எடுக்க வழி ஏற்படுத்தி கொடுப்பது.

இன்னும் பல விஷயங்கள் யோசித்து கொண்டு இருக்கிறோம். ஏனெனில், இப்போது தான் ஒரு வித குழு முயற்சியே ஒன்று கூடி இருக்கிறது. முதலில் இந்த குழுவை தொடர்ந்து கொண்டு போவதே பெரிய விஷயம் அல்லவா. கொஞ்சம் கொஞ்சமாக பல நல்ல விஷயங்களை செய்வதாக முடிவு.


இந்த காபி மார்னிங் மூலம் முதல் விஷயமான வடக்கு தெற்கு இந்திய பெண்களின் ஒருமித்த புரிந்துணர்வு எனும் விஷயத்தை வெளிக்கொண்டு வந்ததை எண்ணி பெருமைப்படுகிறோம். இந்த ஒற்றுமை இருந்தால் போதும் பல விஷயங்களை பெண்கள் சாதிக்க முடியும்.

இது வரை பொறுமையாக படித்ததற்கு நன்றிகள். முடிந்தால் தங்களின் கருத்துகளை பகிர்ந்து விட்டு செல்லுங்கள். நன்றி.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப முக்கியம் ! சரிங்க !