Followers

Wednesday, November 3, 2010

பெண் – வாழ்க்கையே ஓர் நெடிய பயணம் (கதையல்ல உண்மை)

என்னை போன்ற கதை (கதையல்ல நிஜம்) நடை தெரியாதவரையும் அரவணைத்தும், உற்சாகப்படுத்தி  கொண்டும் இருக்கும் சான்றோருக்கு நன்றி

நான் பொதுவாக கதை எழுத தெரியாதவள். ஆனால் நான் என் வாழ்வில் கண்ட பெண்களின் வாழ்க்கை பாதையை அவர்களின் துணைகொண்டு எழுதி வருகிறேன்(நம்முடன் வாழ்பர்களிடம் நிறைய ஏற்ற இறக்க விஷயங்கள் உள்ளன அவை - உங்கள் பார்வைக்கு - இதுவே இந்த தளத்தின் குறிக்கோள்)

பெண் வெறும் வீட்டு அடிமையல்ல என்று நிரூபித்த ஒரு பெண்ணை பற்றிய பதிவு.

நான் சந்தித்த ஒரு பெண்மணியின் 
நினைவுக்குறிப்பிளிருந்து அப்பெண்மணியின் உண்மை வாழ்க்கை உங்க பார்வைக்கு

ஜோவென மழை பெய்து கொண்டு இருந்தது.

ஏம்மா எங்க போய்ட்டா இந்த சரோ - குரல் கணீர் என்று வந்தது.
என்னங்க மறந்துட்டீங்களா  இன்னிக்கு அவங்க பள்ளியில விளையாட்டு தினம். அது தான் நேரம் கழிச்சிதான் வருவேன்னு காலையிலேயே சொல்லிட்டு போய்ட்டா

ம்ம்……………7 பெத்து என்ன பிரோஜனம் ஒன்னு மட்டும் தான் படிக்குது. மத்தது எல்லாம்  வேலைக்கு போயிடுச்சிக.

இவளாவது நல்ல நிலமைக்கு வரணும். ஒரு சாதாரண இசைகலைஞரின் அவா அது

சரோஜா படிப்பில் நல்ல சுட்டி மற்றும் விளையாட்டிலும் நல்ல ஆர்வமுடையவள். அவள் குடும்பத்தில் அவளோடு கூட பிறந்தவர்கள் மொத்தம் 7  பேர். பெரிய குடும்பம் ஆனால் நடுத்தர வர்கத்திட்கும் கீழாக இருந்தது அவர்களின் நிதி நிலைமை

1960 களில் அவள் தன்னுடைய பள்ளிபடிப்பிட்காக போராடி வந்தாள். அக்காலத்தில் பெண் கல்வி ஒன்றும் எளிதாக அமைந்து விடவில்லை அவளுக்கு. ஆனாலும் அவளுடைய விடா முயற்சியின் பலனாக அவளால் 12 ஆம் வகுப்பு வரை செல்ல முடிந்தது. குடும்பத்தில் மற்ற அங்கத்தினர்கள் 8 வது தாண்டவில்லை. அப்போது அவளுக்கு ஆசிரியை பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கான செலவுகளை சரோஜாவின் அப்பாவால் கொடுக்க இயலாது போனது. அவள் அப்பா ஒரு இசைக்கலைஞர் (ormonist) அக்காலகட்டத்தில் அவருக்கு கிடைத்த சொற்ப காசைகொண்டு அவர்கள் குடும்பம் சென்னையில் வசித்து வந்தது

என்னதான் அவள் ஆசிரியை வாய்ப்பை இழந்தாலும் அவளுடைய நம்பிக்கையை யாராலும் உடைக்க இயலவில்லை. அவள் மற்றவர்களிடம் இருந்து வித்யாசப்பட்டவளாக தெரிந்தாள். அவளுடைய குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு செல்லவேண்டி ஆனது. வீட்டில் 2 ஆண் மற்றும் 5 பெண் எல்லோரும் வேலைக்கு செல்லலாயினர். அப்போதே ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் மேற்பார்வையளராக சரோஜாக்கு வேலை கிடைத்தது. தன்னை யார் மதித்து பேசுகிறார்களோ அவர்களுக்கு அவளுடைய மரியாதையை என்றும் உண்டு. பெண்தானே என்று பேசுபவர்களுக்கு நிச்சயம் எதிர்பதம் உண்டு. அக்காலத்தில் அவளை பார்த்தாலே பயம் கலந்த மரியாதையை அவளுடன் பணியாற்றியவர்களுக்கு இருந்தது. அவளுடைய தைரியமான பேச்சு, நடை, உடை , பார்வை பார்த்தே ஆண்கள் ஒதுங்கலாயினர். அது அவளுக்கு தன் மேல் அசைக்க முடியாத மனோ பலத்தை கொடுத்தது


என்னம்மா சரோ எப்படி இருக்கே - மேலாளரின் குரல் வழிந்து கேட்டது.   நல்லா இருக்கேன் சார் ஏன் உங்களுக்கு எதாவது உதவி தேவைபடுதா?

அய்யயோ இல்லம்மா சும்மா தான் கேட்டேன்.  

அந்த மேலாளர் அவளுடைய வறுமையை பயன்படுத்தி விளையாட நினைத்து அடிவாங்கியவர்


அவருக்கு வாங்கிய அடியைவிட அவள் சொன்ன வார்த்தை சுட்டெரித்தது (ஏன்டா உன் மனைவிய வேலைக்கு தானே அனுப்புற இல்ல வேற எங்காவதா).

சென்னையில் ஒரு மழைகாலம்:

இளமைக்கால நினைவுகள் அவள் கண்ணில் வந்து சென்றன. என்ன பாட்டி இப்போ எப்படி இருக்கு - கேட்டாள் அந்த வேலைக்கார பெண். நேத்து தான் முடியாம போச்சி திடிர்னு நெஞ்சு வலி என் நேரம் நான் பிழச்சுகிட்டேன். ஏன் அப்படி சொல்றீங்க ………….

இல்லம்மா என்னால யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது.

ஆனா நான் இப்போ இங்க உங்களுக்கு எவ்ளோ கஷ்டம் குடுக்குறேன் பாரு

என்ன பாட்டி அப்படி சொல்லிட்டீங்க

உங்கள போல வயதானவங்களுக்கு சேவை செய்யறது பெரிய புண்ணியம் என்றாள் அந்த பெண்

இப்போது பாட்டிக்கு கிட்டத்தட்ட 65 வயது.

தன் சொந்தங்களை கூட தப்பாக நினைத்து பார்க்காத அவளுடைய பெருந்தன்மையை நினைத்தே அந்த பணிப்பெண் அவ்வாறு கூறினாள்

தொடரும் ...................

Monday, November 1, 2010

பெண் - திரும்பி பார்க்கிறேன்- தொடர் -3

மஞ்சுவோட அப்பா கேட்டார் - ? 

எல்லா விஷயத்தையும் சொல்லிடீங்களா இல்ல எதாவது விட்டுடீங்களா
ஜோசியர் - எல்லாம் சொல்லிட்டேன்....

ஆனா அவங்க கிட்ட ரெண்டு விஷயம் சொல்லலஎன்னது அது - ஒன்னு உன் பொண்ணு படிப்பு விஷயம். ரெண்டாவது உன் முதல் பொண்ணோட காதல் கல்யாண விஷயம். 

வேணாம் ஜோசியரே எல்லாத்தையும் சொல்லிடுங்க ...........
நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க மாப்பிளை நல்லா சம்பாதிக்கிறார். அவரு கேட்டது பொண்ணு பத்தாவது வரை மட்டும் படிச்சிருந்தா போதும்னு. இப்ப இருக்குற எட்டாவதுக்கும், பத்தாவதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லங்க

அப்புறம் உங்க முத பொண்ணோட கல்யாண விஷயம் ஒன்னும் பெரிசா சொல்லிகரதுக்கில்ல
அப்படி இல்லைங்க நாளைக்கு இதனால மனவருத்தம் வந்துரக்கூடாது.
ஒன்னும் வராது நான் பாத்துக்கறேன்.

முதல் படி முடிந்து பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது

எல்லாருக்கும் திருப்தியாக இருந்ததால் அடுத்த விஷயமான வரதட்சணை பேச்சு வந்தது. மாப்பிள்ளை அம்மா” எங்க வீட்டுல ரெண்டுமே பசங்கதான். ஒரு பெண்ணு தான் உங்கவீட்டுல இருந்து கூட்டி போறோம். அதனால எங்களுக்கு பண விஷயம் ஏதும் வேணாம் உங்களுக்கு எவ்வளவு சீக்கிரமா மண்டபம் பாக்க முடியுமோ பாருங்க.” என்று சொல்லிவிட்டார்கள் .
மூன்று மாதம் கழித்து நாள் குறித்தார்கள் நிச்சயதிட்காக. நிச்சயம் நல்ல விதமாக முடிந்து அடுத்ததாக திருமணம் அடுத்த 3 மாதம் கழித்து குறித்தனர். இதனிடையே மட்டற்ற மகிழ்ச்சியுடன் மஞ்சு எங்களை காண வந்தாள்
நான் அவளிடம் என்னடி மாப்பிள்ளை எப்படி என்று கேட்டேன். அவளும் அவர் மாநிரம்டி ஆனா நல்லா கல கலன்னு பேசுறார்.
அப்டியா பேசற அளவுக்கு வந்தாச்சா.
அவள் சொன்னாள் நான் தான் ஒரு முறை அவருக்கு போன் பண்ணேன். அவரு என்ன உனக்கு பிடிச்சிருக்கா இல்ல உங்க வீட்டுல சொன்னதுக்காக சரின்னு சொல்லிட்டியா  என்றார். நானும் இல்லங்க எனக்கும் உங்கள பிடிச்சிருக்குன்னு சொன்னேன். ரொம்ப சந்தோசம் அப்டின்னு சொன்னாரு 

நல்லபடியாக திருமணம் இனிதே முடிந்தது
அவளும் சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்றுவிட்டாள். அடிக்கடி போன் செய்வாள் என் வீட்டில் நான் ராணி போல இருக்கிறேன் என்னை எந்த வேலையும் என் மாமியார் செய்ய விடுவதில்லை என்றும் வேலைக்கு ஆள் வைத்துள்ளார்கள் என்றும் கூறினாள்
பின்பு ஒரு நாள் அவளிடம் இருந்து போன் வந்தது.
தான் கருவுற்று இருப்பதாகவும், சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினாள். அவளை கிட்ட தட்ட ஒரு வருடம் கழித்து சென்னையில் ஒரு மருத்துவமனையில் குழந்தையுடன் பார்க்க முடிந்தது. அப்போது தான் அவளுக்கு குழந்தை பிறந்திருந்தது அதுவும் இரட்டை குழந்தைகள் ஆண் மற்றும் ஒரு பெண். என்னை பார்த்த பொழுது அவள் சொன்னது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் எவ்வளவோ கடவுளை வேண்டி இருக்கிறேன், என்னுடைய பிரார்த்தனை கடவுளுக்கு எட்டிவிட்டது என்று நினைக்கிறேன். நான் எனது வாழ்நாளில் கடந்த ஒரு வருட காலமாகத்தான் சந்தோஷத்துடன் வாழ்கிறேன் என்று அவள் கூறியதும் அவள் கண்களில் ஆனந்த கண்ணீரை கண்டேன்.

நான் பார்த்த அந்த நண்பி இன்று ஓர் முதுகளை பட்டதாரி. அவளுடைய கணவன் அவளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி இன்று தனியாக ஒரு அழகு நிலையத்தையே நடத்தும் அளவுக்கு அவளின் எண்ணத்தை (தாழ்வு மனப்பான்மைமாற்றி விட்டார்.

அவள் அடிக்கடி கூறிவந்த அதிர்ஷ்டம் கெட்டவள் எனும் வார்த்தை  மாறிவிட்டது. இன்று எங்கள் நண்பிகளில் அவள் மிக உயர்ந்த நிலையை பணம் மட்டும் இல்லாது குணத்திலும் அடைந்திருக்கிறாள். இன்றும் அவளிடம் நாங்கள் எந்த வேறுபாட்டையும் காண இயலவில்லை. அவளிடம் 15 பெண்கள் வேலை செய்கின்றனர்
என்றும் பொறுமையுடன்  பேசும் அவளின் குணம் இன்றைக்கும் அவளிடம் இருப்பதை நான் மிகபெரிய விஷயமாகவே பார்க்கிறேன்.
இப்பொழுதெல்லாம் அவள் அடிக்கடி சொல்லும் வார்த்தை என் வெற்றிக்கு என் கணவரின் நம்பிக்கையே காரணம். என்னை அவர் புரிந்து கொண்டது மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காட்டும் அன்பு இவைதான் என்னை இந்த அளவுக்கு முன்னேற்றியது என்பாள்

இப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் நல்ல கணவன் அமைந்துவிட்டால் வாழும் வாழ்க்கையே சுவர்க்கம் ஆகிவிடாதோ !!!!!!!!!!!!!!


முற்றும்