Followers

Thursday, October 28, 2010

பெண் - திரும்பி பார்க்கிறேன்- தொடர் - 2

நண்பர்களே தயவு செய்து பிழைகளை மன்னிப்பீராக.


அப்போது தான் அது நிகழ்ந்தது …

ஒரு சமயத்துல ஒரு பிரச்சினை வந்தாலே முடியாது

மஞ்சு வேலை செய்து கொண்டிருக்கும் போது "தொப்"
என சத்தம் கேட்டது அவளுடன் வேலை செய்யும் சகா திரும்பி பார்த்தாள்.
அந்த இடத்திலேயே மயங்கி விழுந்திருந்தாள் மஞ்சு. மருத்துவமனைக்கு தூக்கிகொண்டு ஓடினார்கள். மருத்துவர் அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாகவும் மற்றும் சுரப்பி பிரச்சினையும்(தைய்ராய்டு) கூடவே இருப்பதாகவும்  உறுதி படுத்தினார் 

அவள் தாய் அதே நாளில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். கிட்ட தட்ட ஒரு வருட காலம் அக்குடும்பம் மருந்து வாங்கவே பெரும் பணத்தை செலவிட்டது.

இதனிடையே முதல் மகளின் கணவன் பணம் கேட்டு அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டான். இதற்கும் முதல் பெண்ணிற்கு 3 லட்சம் செலவு செய்து திருமணம் முடித்து கொடுத்திருந்தனர் (இதற்கும் இவர்களின் திருமணம் காதல் திருமணம்)

 பிரச்சினையின் முழு வடிவமாக அக்குடும்பம் மாறிப்போனது. வீட்டில் எப்போது பார்த்தாலும் பண பிரச்சினை மேலோங்கியது. அக்குடும்பம் மிகப் பெரியது அவளின் அப்பா, அம்மா, தாய் பாட்டி, தந்தை வழி பாட்டி, அத்தைகள் என எப்போது பார்த்தாலும் திருவிழா போலவே இருக்கும். ஒரு வாராக அவளுக்கு திருமணம் முடிக்க வரன் தேடினர்

இந்த நாட்டில் பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை. வெளியே வீரம் பேசும் பெருமகனார் தனக்கு கல்யாணம் என்று  வரும்போது மட்டும் தன் தாயோ, தந்தையோ  பெண் வீட்டாரிடம் கேட்கும் வரதட்சணை விஷயத்தில் நுழைவதே இல்லை.
பாவம் பின்பு எங்காவது கேட்கும் போது நானா கேட்டேன் என் அப்பா அம்மா கேட்டார்கள் என்று சொல்லி தப்பித்து கொள்ளும்  பிறவிகள் இங்கே நிறைய உண்டு

“இந்த நாட்டில் பெண்ணாக பிறந்ததற்காக நான் பெருமை கொள்ளும் நாள் எந்நாளோ”

இவ்வளவு பிரச்சினையிலும் தனக்கு வேண்டிய பணத்தை தன் தாயின் நகை விற்று வாங்கி போனாள் பெரிய பெண். இருந்த நகைகளும் போயிற்று 1 லட்சம் பெறுமான நகை பணமாகி அவளுடன் சென்று விட்டது

சின்னவளுக்காக சேர்த்து வைத்திருந்த 10 சவரன் நகை மட்டுமே மீதி இருந்தது. இந்த காலத்தில் நன்றாக படித்த மற்றும் பணமிருக்கிற குடும்பங்களே பெண்களை திருமணம் கட்டி குடுக்க முடிவதில்லை. இதில் படிப்பு எட்டாம் வகுப்பும், குறைந்த பணமும் வைத்துத்கொண்டு எப்படி கரை ஏற்றப்போறோம் என்ற கேள்வி பாவம் அந்த பெண்ணின் தகப்பனுக்கு தலயில் பெரிய பாரம் சுமப்பது போலானது.

கிட்டதட்ட 50  வரன்கள் வந்து போனது. எல்லாம் பணம் மற்றும் பெண்ணின் படிப்பு சம்பந்தப்பட்ட குறைகளை காட்டியே சென்றது. இதற்கிடையில் எங்க கூட படிச்ச எல்லாருக்கும் கல்யாணம் ஆனது. காலம் ஓடிட்டே இருந்தது
அவளுக்கு வயது 27 என்ன செய்வது என்று தெரியாம அவங்க பெத்தவங்க கவலை பட்டுக்கொண்டே இருந்தாங்க

அப்போதான் ஒரு வரன் வந்தது, பையன் விற்பனை பிரதிநிதியா இருக்கான் நல்ல சம்பளம் குடும்பமும் சின்னது. ரெண்டே பசங்க முடிச்சிடலாமா - ஜோசியர் அவருக்கான வருமானத்த முடிவு பண்ணி கேட்டார்

சரி என்ன கேக்குறாங்க, அங்க தானே பிரச்சினையே

இல்லங்க அவங்க ஒன்னும் பெரிசா எதிர்பாக்கல கல்யாணத்த உங்க இஷ்டப்படி வச்சிக்கலாம்

இங்க பாருங்க நாங்க வாழ்ந்து கெட்ட குடும்பம் இப்போ எங்களோட நெலம சரி இல்ல, அதனாலதான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
கட்டி குடுத்தப்புறம் எதாவது பிரசினையின்னா எங்களால முடியாது

ஜோசியர் பெண்ணின் தகப்பனின் முகத்தையே பார்த்தார்.

ஏம்பா நானே எவ்வளவு வரன் கொண்டுவந்திருப்பேன்?

எனக்கு தெரியாதா

எனக்கும் அவ பொண்ணு மாதிரிதாம்பா .

கவலைபடாதீங்க பாத்துக்கலாம்.

ஜோசியர் கொடுத்த தெம்பில் அக்குடும்பம் திருமண விஷயத்தில் சந்தோஷமானது

அவளோட அப்பா கேட்டார் - 

எல்லா விஷயத்தையும் சொல்லிடீங்களா இல்ல எதாவது விட்டுடீங்களா- ?


தொடரும்………………..

5 comments:

எல் கே said...

நீங்கள் சொல்லும் விதம் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்

விஷாலி said...

நன்றி நண்பர் அவர்களே. என்னால் முடிந்தவரை உண்மையை கொட்டுகிறேன். எழுத்து பிழைகளை மன்னிப்பீராக

போளூர் தயாநிதி said...

ivaigal unmaiyin mugamum kooda. intha poliththan mana sangatangalai ozhikka pengalthan munaiyavendum.
polurdhayanithi

விஷாலி said...

திரு. polurdhayanithi அவர்களே பெண்ணுக்கு பெண்ணே சில இடங்களில் எதிரியாகி விடுகிறாள் என்ன செய்வது

விஷாலி said...

நன்றி திரு. LK அவர்களே உங்களை போன்றவர்களின் ஊக்கப்படுத்துதலே என்னை போன்றோரை கை தூக்கி விடும்.
நன்றி