Followers

Wednesday, October 27, 2010

பெண் - திரும்பி பார்க்கிறேன்-தொடர்

இது விதியா 

பொதுவாக இந்த வாழ்க்கை வரலாறு எனும் விஷயம் என்னை அடிக்கடி  பாதித்து கொண்டே இருந்தது. முடிவில் உண்மையை மட்டும் எழுதலாமே என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு.
நம் கண் முன்னே நடந்தவைகளை பற்றியே எழுதுவோமே என்று தோன்றியது 

வாழ்க்கை எல்லோருக்குமே இனிதாக அமைந்து விடுவதில்லை.

இந்த சமூக அமைப்பில் தான் எவ்வளவு வித்தியாசம் ஆணுக்கும் பெண்ணுக்கும்.

அதிலும் பெண்ணாகபப்பட்டவளுக்கு ஒரு வலயத்தை நமது தமிழ் மற்றும் இந்திய சமூகம் வரையறுத்துள்ளது. அதிலும் மத்தியவர்க்க(middle class) குடும்பத்தில் இதன் தாக்கம் அதிகம் 
என்னுடைய நண்பியினுடைய வாழ்க்கை தொடங்கியது சென்னை மயிலாப்பூரில் இருந்து. அவள்  குடும்பம் வர்த்தக ரீதியில் நடுநிலைமையில் இருந்தது. அவள் வீட்டில் இரு மகவுகள் ஒன்று அவள் மற்றொன்று அவளுடைய  சகோதரியும் மட்டுமே. அந்த கால நினைவுகளில் மூழ்குகிறேன்.
அது ஒரு வசந்த காலம் எங்களுடைய  பள்ளிபடிப்பு இன்றும் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. . நண்பியினுடைய சகோதரி போட்ட சண்டைகளுக்கு அளவே கிடையாது. இதற்கும் அவளுக்கும், அவளுடைய சகோதரிக்கும் ஒரு வருட இடைவெளி தான். அவள் படிப்பில் ஒன்றும் சுட்டியான பெண் கிடையாது என்பது பள்ளி காலத்தில் பொதுவான கருத்தாக அவள் குடும்பத்தில் இருந்தது. ஆனால் அவளுக்கு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை இருந்தது. அது எதனால் என்று கண்டறிய முடியவில்லைஅவள்  அப்பா அடிக்கடி சொல்வது பெரிய பொண்ண போல இவளும் படிப்பிலே சுட்டியாக இருக்க கூடாதா என்று சொல்லிகொண்டே இருப்பார். என்ன செய்ய இவளுக்கு படிப்பு சரியாக புத்தியில் ஏறவில்லை என்று அவள் அப்பா சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அவளுக்கு ஒரு விதமான மறந்து போகும் பழக்கம் இருந்தது. அதனால்தானோ என்னமோ அவளால் கல்வியில் சிறக்க இயலவில்லை

அவளுடைய ஒரு விஷயம் மறக்க முடியாதது - அது - என்ன பிரச்சினை வந்தாலும் பொய் சொல்ல மாட்டாள்

அப்போது அவள் குடும்பம் தொழிலில் திடும் என கீழே போனது. அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அக்காலம் அவள் வாழ்வில் மோசமான கால கட்டமானது

திடீர் என்று வீடும் மாற்றப்பட்டது. அதாவது வீடு விற்கப்பட்டு கடன் அடைக்கப்பட்டதாக அவள் அம்மா கூறினார்கள். அவளுக்கும்  அவள்  அக்காவுக்கும் வாழ்க்கை வித்தியாசமான பாதையில் செல்வதை காண முடிந்தது. என்ன செய்ய நாம் ஒன்று நினைத்தால் கடவுளின் விருப்பம் வேறாக இருக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி மாற்றப்பட்டது மற்றும் நண்பிகள் மாறினர். அந்த மாற்றம் இன்னும் அவளை அதிகமாக பாதித்தது

அவள் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் போது தேர்வில் தோற்று போனாள். அவள் படித்த பள்ளியில் ஒரு முறை வருட தேர்வில் தோற்றால் மறுமுறை அங்கே படிக்க இயலாது என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. வீட்டில் உள்ளோர் யாவரும் அவளை  திட்டி தீர்த்தார்கள், அவள் அம்மாவை தவிர ஏனெனில் அவர்களுக்கு மட்டுமே அவளை நன்றாகத்தெரியும். அவள் பொதுவாக எந்த கவலையும், சந்தோஷத்தையும் வெளிக்காட்டி கொள்வது கிடையாது. அவளுடைய  பள்ளிபடிப்பு நின்று போனதற்கும் அதுவே காரணமாகியது. வீட்டில் எல்லோரும் திட்ட போக அந்த பயத்தில் காய்ச்சல் வர மற்றும் அக்காய்ச்சல் விஷ காய்ச்சலாக மாற கிட்ட தட்ட 25  நாட்களுக்கு அவளால்  எழுந்து நடக்க முடியாமல் போனது

படிப்பு நின்று போனதும் வீட்டில் முடிவு செய்து விட்டார்கள் இவளுக்கு ஏதாவது கைத்தொழில் தெரிந்து கொண்டால் பிழைத்ததுகொள்வாள் என்று
அவளும் அந்த முடிவை எடுத்து புதிதாக தொடங்கப்பட்ட தையல் பயிற்ச்சி வகுப்புக்கு செல்ல ஆரம்பித்தாள். சரி எல்லாம் நல்ல போக்கில் போய் கொண்டு இருக்கிறது என்று நினைத்து கொண்டாள்
அதற்கும் ஒரு முடிவு ஏற்பட்டது அதுதான் அவளை தொடர்ந்த ஒரு வாலிபன் அவளிடம் தினமும் பேச முயற்சி செய்ய ஆரம்பித்தது. அவளும் முடிந்தவரை அவனிடமிருந்து விலகி ஓடிக்கொண்டு இருந்தாள். ஒரு நாள் இந்த பிரச்சினையை அவளுடைய மாமா பார்த்துவிட்டார். உடனே அந்த பையனை அழைத்து இது வேண்டாம் தம்பி என்று அறிவுரை சொல்லி பார்த்தார். ஒன்னும் எடுபடுகிராமாதிரி இல்லை . முடிவில் அந்த  கைத்தொழில் 
பயிற்ச்சியும் அவளின் கை விட்டு சென்றது

படிப்பும் போச்சி, பயிற்ச்சியும் போச்சி சரின்னு அவங்க அம்மா அவளை ஒரு அழகு நிலையத்தில் பயிற்சிக்கு விட்டு விட்டார்கள். கிட்டத்தட்ட 10  வருட உழைப்பு அவளுக்கு அங்கிருந்து ஆரம்பித்தது. அவள் அடிகடி சொல்லும் ஓர் விஷயம் " எனக்கு அதிர்ஷ்டமே இல்லடி".
அறிவு சார்ந்த விஷயம் அவளுக்கு குறைந்து விட்டதாகவும் வேலை சார்ந்த விஷயம் மட்டுமே அவளுக்கு மேலோங்கி இருப்பதாகவும் அடிகடி அவள் கவலை பட்டுகொள்வாள்

அவளுடைய வேலை சுலபமில்லை மற்றும் கிட்டதட்ட காலையில் 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அவள் நின்று கொண்டே வேலை பார்க்க வேண்டும்

 அவளுடன் பள்ளியில் படித்த மற்ற நண்பிகளை பார்க்கும் பொழுது அவளுக்கு தான் நன்றாக படிக்கவில்லையே என்ற எண்ணம் அதிகமாகும்

அவளுடைய சகோதரி நன்கு படித்து ஒரு அலுவலகத்தில் நல்ல வேளையிலும் அமர்ந்து விட்டாள். அடிக்கடி என் நண்பியின் படிப்பை பற்றி அவள் அடிக்கும் கமெண்டுகளை காது கொடுத்து கேட்க இயலாது. என்னமோ இவள் மட்டும் தான் நன்றாக சம்பாரிப்பது போலவும் ஊரில் யாருமே அப்படி இல்லாது போலவும் காட்டிகொள்வாள்
அப்போதும் என் நண்பி அமைதி காத்து வந்தாள் 

அவளுடைய அக்காள் வேலை பார்த்த இடத்தில் ஒருவரிடம் நட்பு ஏற்பட்டு அது காதாலாகிபோனது. வீட்டில் பெரிய யுத்தமே ஏற்பட்டு முடிவில் அப்பெண் விஷம் அருந்தும் அளவுக்கு சென்று விட்டாள். கடைசியில் அவள் அப்பா திருமணத்துக்கு ஒப்புதல் தந்தார். திருமணம் முடிந்து சகோதரி கிளம்பி சென்று விட்டாள்

இங்கு பார்க்கவேண்டியது திருமணம் முடித்த அந்த பெண்ணின் விஷயம் முடிந்தது. ஆனால் இரண்டாவது பெண்ணுக்கு திருமணம் எப்படி செய்வது என்று பெற்றோர் விழித்தார்கள். ஏனென்றால் பெரியவளுடயது காதல் திருமணம் என்பதால்


அப்போது  தான் அது நிகழ்ந்தது .........................

தொடரும் .....................



3 comments:

சௌந்தர் said...

ரொம்ப நல்லா இருக்கு தொடருங்கள்

விஷாலி said...

வருகைக்கும் கமன்ட்சுக்கும் நன்றி நண்பரே

எல் கே said...

அட டக்குனு சஸ்பென்ஸ் வசிடீங்க